நாடாளுமன்ற உறுப்புரிமையிலிருந்து ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் டயனா கமகேவை நீக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு தாம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
20வது திருத்த சட்டமூலத்தின் போது கட்சியின் தீர்மானத்திற்கு எதிராக, திருத்தச் சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களித்தமையால் கட்சியின் கொள்கைகளுக்குப் புறம்பாக செயற்பட்டதாக கருதி ஐக்கிய மக்கள் சக்தியினால் ஒழுக்காற்று விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது.
ஒழுக்காற்றுக் குழுவின் பரிந்துரைகள் கட்சியின் செயற் குழுவில் நேற்று(07) சமர்ப்பிக்கப்பட்டது. அதன் பிரகாரம் நாடாளுமன்ற உறுப்புரிமையை நீக்கக் கோரி தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய Viber குழுவில் இணைந்து கொள்ளுங்கள் (இங்கே கிளிக் செய்யுங்கள்)





