போதைப்பொருள் குற்றச்சாட்டில் வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரு ஈரானிய கைதிகள் கை சுத்திகரிப்பு மருந்துகளை உட்கொண்டதால் உயிரிழந்துள்ளனர்.
கை சுத்திகரிப்பானை உட்கொண்ட மேலும் 10 ஈரானிய கைதிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடக பேச்சாளர், சிறை ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.
இலங்கையில் உள்ள ஈரானிய தூதரகம் வழங்கிய கை சுத்திகரிப்பான்களையே கைதிகள் உட்கொண்டதாக ஊடக பேச்சாளர் கூறினார்
செய்திகளை உடனுக்குடன் அறிய Viber குழுவில் இணைந்து கொள்ளுங்கள் (இங்கே கிளிக் செய்யுங்கள்)





