அரசுக்குள் உள்ள பிரச்சினைகளை பகிரங்கமாக மக்களுக்கு சொல்ல பங்காளிக்கட்சிகள் தீர்மானம்

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 12 பங்காளிக்கட்சிகள் கொழும்பில் இரகசிய சந்திப்பொன்றை நடத்தியுள்ளனா்.

ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினா் ஒருவரின் இல்லத்தில் நடந்த இந்த சந்திப்பில், அரசியன் செயற்பாடுகள் மற்றும் மக்கள் தெரிவிக்கும் விமர்சனங்கள் குறித்து நீணடநேரம் ஆராயப்பட்டுள்ளது.

அரசாங்கத்துக்குள் இருக்கும் பிரச்சினைகள் குறித்து பேச்சு நடத்த ஜனாதிபதியிடம் நேரமொன்றை எழுத்துமூலம் கோரியிருந்தபோதும், அதற்கான நேரம் கிடைக்காமை குறித்தும் இங்கு விமர்சிக்கப்பட்டுள்ளது.

அரசுக்குள் இருக்கும் பிரச்சினைகள் குறித்து பகிரங்க கருத்துகளை தெரிவித்து, மக்களுக்கு உண்மைகளை சொல்வதெனவும் பங்காளிக்கட்சிகள் தீர்மானித்துள்ளன.