தியாகி திலீபனின் உள்ளீட்ட வீடுதலைப் போராட்டத்தில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூறுவது தடுக்கப்பட்டமை தொடர்பாக அனைத்துக் கட்சிகளும் மீண்டும் ஒன்றுகூடி கலந்துரையாடின.
நல்லூர் இளங்கலைஞர் மண்டத்தில் இன்று மாலை 4.30 மணியளவில் இக் கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன்போது தியாகி திலீபனின் நினைவேந்தலை நிறுத்தப்பட்டமை தொடர்பிலும், எதிர்காலத்தில் இவ்வாறான நிகழ்வுகளை நிகழ்துவது தொடர்பாகவும் அனைத்து கட்சிகளும் ஒன்றுகூடி கலந்துரையாடின.
இதன்போது நாளைய நீதிமன்ற தீர்பின் பின்னர் தமது முடிவுகளை பத்திரிகையாளர் சந்திப்பொன்றை வைத்து தமது முடிவுகளை அறிவிக்கவுள்ளதாகவும் அனைத்துக் கட்சிக்கூட்டதில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.





