தமிழ் தேசிய கட்சிகளினால் நாளை மனிதச் சங்கிலிப் போராட்டம்!

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு கண்டனத்தை வெளிப்படுத்தும் வகையில் தமிழ் தேசிய கட்சிகளினால் நாளையதினம்(4) மனிதச் சங்கிலிப் போராட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.

 

இவ் மருதனார்மடம் சந்தியில் நாளை காலை 9 மணிக்கு ஆரம்பம் ஆகும் மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதி முட்டாஸ் கடை சந்தியில் காலை 10 மணியளவில் நிறைவடையவுள்ளது.

 

மனிதச் சங்கிலிப் போராட்டம் வெற்றியளிப்பதற்கு தமிழ் மக்கள் தங்கள் பூரணமான ஆதரவை வழங்க வேண்டும் என அரசியால்ல்வாதிகள், சமூக ஆர்வலர்கள் பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.