அரியாலை சரஸ்வதி இளைஞர் கழகம் அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் அனுமதியுடன் நடாத்தும் ‘சரஸ்வதி பிறீமியர் லீக்’ துடுப்பாட்டத் தொடரின் முதலாவது பருவகாலத் தொடரிற்கான கிண்ணம், மற்றும் சீருடை அறிமுக நிகழ்வு கடந்த செவ்வாய்க்கிழமை சரஸ்வதி சன சமூக நிலைய கலாசார நிலைய மண்டபத்தில் விமர்சையாக இடம்பெற்றது.
5ஆம், 6ஆம் திகதிகளில் அரியாலை சரஸ்வதி சனசமூக நிலைய மைதானத்தில் போட்டிகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இன் நிலையிலேயே வெற்றிக்கிண்ணம், வீரர்களுக்கான சீருடையும் அறிமுகப்படுத்தப்பட்டது.
சரஸ்வதி சன சமூக நிலைய தலைவர் இ.ப மோகன் ஜித் தலைமையில் இடம்பெற்ற இவ் வெற்றிக் கிண்ண அறிமுக நிகழ்வில் முதன்மை விருந்தினராக கிருபா சாரதி பயிற்சிக் கல்லூரியின் அதிபரான கிருபாகரன், சரஸ்வதி சன சமூக நிலைய தலைவர் இ.ப மோகன் ஜித் ஆகியோர்’ இணைந்து வெற்றிக்கிண்ணத்தினை அறிமுகப்படுத்தி வைத்தனர்.
ற





