யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்! பல்வேறு விடயங்கள் ஆராய்வு

யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்றைய தினம் கடற்தொழில் அமைச்சரும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றது.

இன்று காலை9 மணியளவில் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது.

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூடலடத்தில் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவரும் வடக்கு மாகாண ஆளுநருமான பி.எஸ்.எம்.சாள்ஸ், வடக்குமாகாண அவைத் தலைவர் சி.விகே.சிவஞானம், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், யாழ் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் ம.பிரதீபன், திணைக்களங்களின் பணிப்பாளர்கள் மற்றும் அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்