கொரோனா தொற்று அதிகரிப்பினால் நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையினால் எதிர்வரும் 31 ஆம் திகதி சனிக்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தில் நடைபெறவிருந்த விவசாய ஆராய்ச்சி நிலைய திறப்பு விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா தலைமையில் நடைபெறவிருந்த இத் திறப்பு விழாவில் கொழும்பிலிருந்து கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், இலங்கைக்கான ஜப்பானிய உயர்ஸ்தணிகர் அகிரா சுகியமா, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க, கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா ஆகியோர் கொழும்பிலிருந்து வருகைதரவிருந்த நிலையில், கொழும்பு மற்றும் அதனையண்டிய பகுதிகளில் ஊரடங்கு சட்டம் அறிவிக்கப்பட்டிருப்பதனால் நிகழ்வை ஒத்திவைப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.





