பசிலை நாடாளுமன்றத்திற்குள் கொண்டுவரவே 20ஆம் திருத்தம் கொண்டுவரப்பட்டது என வெகுஜன ஊடக அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கெகலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
ஸ்ரீலங்கா பொதுஜன பொரமுனவை ஆரம்பித்த தலைவர்களுள் பசில் ராஜபக்ஷவும் ஒருவர்.
அவர் குறுகிய காலத்தில் கட்சியை வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு சென்றுள்ளார். அவரை நாங்கள் கௌரவப்படுத்த விரும்புகின்றோம்.
பசிலை நாடாளுமன்ற உறுப்பினராக பார்க விரும்புகின்றோம். அதற்காகவே 20ஆம் திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது, என்றார்.





