இறந்தவர்களின் உடலை தகனம் செய்யும் முடிவில் மாற்றமில்லை – சகாதார அமைச்சு

கொரோன வைரஸால் இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்யும் முடிவில் இதுவரை எந்த மாற்றமும் இல்லை என சகாதார அமைச்சின் பேச்சாளர் ஜயருவான் பண்டார தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் இறக்கும் முஸ்லிம்களின் உடல்களை புதைப்பதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் ஆராயுமாறு நேற்று(09) சுகாதார அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல் வழங்கியிருந்தார்.

இதேவேளை ஜனாதிபதியின் அறிவுறுத்தலை மேற்கோள்காட்டி முஸ்லிம்களின் உடலை புதைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியதாக தவறான செய்திகள் வெளிவந்த நிலையிலேயே சகாதார அமைச்சின் பேச்சாளர் ஜயருவான் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.