யாழ் பல்கலையில் பற்றரி ஆராய்ச்சிக்கான நவீன ஆய்வுகூடங்கள் இன்று திறப்பு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் உலக வங்கி அனுசரணையுடன் பௌதீகவியல் மற்றும் இரசாயனவியல் துறைகள் இணைந்து முன்னெடுக்கும் பற்றரி ஆராய்ச்சிக்கென நவீனமயப்படுத்தப்பட்ட ஆய்வுகூடங்களின் திறப்புவிழா இன்று(25) காலை இடம்பெற்றது.

யாழ் பல்கலைக்கழகத் துணைவேந்தரும், முன்னாள் விஞ்ஞான பீடதிபதியுமான பேராசிரியர் சி. சிறீசற்குணராஜா இந்த ஆய்வுகூடங்களைச் சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைத்தார்.