வரவு – செலவுத் திட்ட வெற்றியை கொண்டாட சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று(10) மாலை ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வை இரத்து செய்யுமாறு, எதிர்க்கட்சி எம்பி சமிந்த விஜேசிறி கோரிக்கை விடுத்துள்ளார். இதனை ஏற்ற சபாநாயகர் குறித்து நிகழ்வை இரத்து செய்வதாக அறிவித்துள்ளார்.
இன்று நாடாளுமன்றில் உரைாற்றிய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் விஜேசிறி, நாட்டில் கொரோனா நிலைமை காணப்படும் போது சபாநாயகர் பட்ஜட் கொண்டாட்டம் நடத்துவது பொருத்தமற்றது. கொண்டாட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டும் என கோரிக்கைவிடுத்தார்.
இதற்கு பதிலளித்த சபாநாயர், குறித்த நிகழ்வை இரத்து செய்து, அதற்கு ஒதுக்கப்பட்ட நிதியை பாதிக்கப்பட்டோருக்கு வழங்குவதாக தெரிவித்துள்ளார்.





