சட்டமா அதிபர் திணைக்களத்திற்கான உத்தியோகபூர்வ விடுதி வவுனியாவில் திறப்பு

சட்டமா அதிபர் திணைக்களத்திற்கான உத்தியோகபூர்வ விடுதி இன்று(10) வவுனியா ஈரப்பெரியகுளம் பகுதியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

2015ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில் கட்டடப்பணிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் குறித்த கட்டடம் தற்போதைய அரசாங்கத்தின் பங்களிப்போடு இராணுவத்தினரினால் நிர்மாணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

வட மாகாணத்திற்கான சட்டமா அதிபர் திணைக்கள விடுதியாக அமைக்கப்பட்டுள்ள இக்கட்டடத்தினை சட்டமா அதிபர் தபேர டி லிபேரா இன்று உத்தியோகபூர்வமாக திறந்து வைத்திருந்தார்.