தமிழ்த் தேசியத்தின்பால் உள்ள எட்டு கட்சிகள் ஒன்றிணைந்துள்ள நிலையில் அவர்கள் அனைவரையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கீழ் இணைப்பதா? அல்லது வேறு ஒரு குடையின் கீழ் இணைவதா? என்பது தொடர்பில் சிந்தித்து வருகின்றோம் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் இன்று(12) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிகையில்,
மற்றவர்களை ஒற்றுமைப்படுத்திவிட்டு தங்களது தனித்துவத்தை பேணவேண்டும் என்று நினைத்தால் ஒற்றுமைப்படுத்தலில் வெற்றி பெறமுடியாது.
தற்போது வடக்கு – கிழக்கில் தமிழ்த் தேசியத்தை ஆதரிக்கும் எட்டு கட்சிகள் ஒன்றிணைந்துள்ள நிலையில் அவர்கள் அனைவரையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கீழ் இணைப்பதா? அல்லது வேறு ஒரு குடையின் கீழ் இணைவதா? என்பது தொடர்பில் சிந்தித்து வருகின்றோம், என தெரிவித்தார்.





