மஹர சிறைச்சாலை அமைதியன்மைக்கான காரணம் வௌியானது

பாதாள உலகக்குழு உறுப்பினர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலாலே மஹர சிறைச்சாலையினுள் அமைதியின்மை ஏற்பட்டதாக சிறைச்சாலை ஆணையாளர் துசித உடுவர தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

இவர்களுக்கு இடையில் கொனாகோவிலே ரொஹவின், மாளிகாவத்தை சுரேஷின், கனேமுல்ல சஞ்சீவவின் மற்றும் ரன்கெடியா என்ற பாதாள உலக குழு உறுப்பினரின் சகாக்கள் உள்ளன என சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இம் மோதல் சம்பவத்திற்கு பின்னர், போதையில் இருந்த சில கைதிகள் சிறைச்சாலையினுள் பாடல் பாடியவாறு இருந்த வீடியோக்கள் ஊடகங்களுக்கு வௌியிடப்பட்டிருந்த காணொளியில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.