மருதனார்மடம் கொரோனா கொத்தணியில் மேலும் 4 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார். மேலும்,
மில்லேரியா மற்றும் மருத்துவ ஆராய்ச்சி நிலைய ஆய்வுகூடங்களில் இன்று (26) சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் போது இவர்களுக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த மருதனார்மடம் சந்தை வியாபாரிகளுடன் நேரடித் தொடர்புகளை உடைய நான்கு பேரே இவ்வாறு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது
இதன்மூலம் மருதனார்மடம் கொரோனா கொத்தணியில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 109ஆக உயர்வடைந்துள்ளது.





