“நாட்டில் கொரோனா மரண எண்ணிக்கையை வரையறுப்பதே எங்களினுடைய பிரதான இலக்கு.” என கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
இதுவரையில் நாட்டின் மொத்த சனத்தொகையில் 43 சதவீதமானவர்களுக்குக் கொரோனாத் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. தடுப்பூசி ஏற்றும் நிலையங்கள் காணப்பட்டாலும் சிலர் அதற்கு வருவதற்கு விரும்பாத காரணத்தால் நடமாடும் தடுப்பூசி நிலையங்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன.
எந்தவொரு கொரோனாத் தடுப்பூசியையும் போட்டுக்கொண்டு இலங்கையிலிருந்து எந்தவொரு நாட்டுக்கும் செல்ல முடியும் என வெளிவிவகார அமைச்சினுடைய செயலாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது என இராணுவத் தளபதி மேலும் தெரிவித்தார்.





