இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால், மாலைத்தீவு பாதுகாப்பு அமைச்சர் ஆகியோர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை தனித்தனியாக சந்தித்தனர். இச் சந்திப்பு இன்று (27) விஜேராம உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.
குறித்த சந்திப்பின் போத தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால், இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்த்து செய்தியொன்றை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ ஆகியோரிடம் வழங்கினார். மாலைத்தீவு பாதுகாப்பு அமைச்சரும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார்.






