மலேசியாவினுடைய அடுத்த பிரதமராக இஸ்மாயில் சாப்ரி யாக்கோப் பதவியேற்கவுள்ளதாக மலேசியா அரச மாளிகை உத்தியோகபூர்வமாக தெரிவித்துள்ளது.
சில நாள்களாக அந்நாட்டில் நீடித்த நிச்சயமற்ற அரசியல் நிலைக்குப் பிறகு, இவ் அறிவிப்பு வந்துள்ளது.
114 நாடாளுமன்ற உறுப்பினர்கள், இஸ்மாயில் சாப்ரியை பிரதமராக முன்மொழிந்துள்ளதாக அரச மாளிகை வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது. புதிய அரசாங்கத்தை அமைக்க அந்தப் பெரும்பான்மை போதுமானது என அது குறிப்பிட்டது.





