விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ வருகின்ற 20ம் திகதிக்கு முன்னர் 100 பெளத்த பிக்குகளுடன் இந்தியா செல்லவுள்ளார்.
இந்தியாவின் குஷி நகரில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விமான நிலையம் வரும் 20ம் திகதி இந்தியப் பிரதமர் மோடியினால் திறக்கப்படும்.
இந்நிகழ்வில் பங்கேற்க நாமல் ராஜபக்ஷவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த விமான நிலையம் பெளத்த கலாசாரத்தை விருத்தி செய்யும் நோக்கில் உருவாக்கப்பட்டதாக இந்திய தரப்பு கூறுகிறது.
இந்நிலையில் அங்கிருந்து முதல் விமானம் பிக்குமார்களுடன் இலங்கைக்கு வரவுள்ளது. இதற்காகவே 100 பிக்குகளுடன் நாமல் ராஜபக்ஷ இந்தியாவுக்கு செல்லவுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய Viber குழுவில் இணைந்து கொள்ளுங்கள் (இங்கே கிளிக் செய்யுங்கள்





