மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடையை எதிர்வரும் 21ஆம் திகதி வரை கடுமையாக அமுல்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கொரோனா தடுப்பு தேசிய செயலணி தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று(15) இடம்பெற்ற கொரோனா தடுப்பு தேசிய செயலணியின் கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 19, 20ஆம் திகதிகளில் விடுமுறை தினம் என்பதால் அதனை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கொரோனா தடுப்பு தேசிய செயலணி மேலும் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய Viber குழுவில் இணைந்து கொள்ளுங்கள் (இங்கே கிளிக் செய்யுங்கள்)





