நோய் அறிகுறிகள் காணப்பட்டால் மாணவர்களை பாடசாலைக்கு அனுப்பவேண்டாம் – சுகாதார அமைச்சு

பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்களுக்கு ஏதாவது நோய் அறிகுறிகள் காணப்படுமாயின் அவர்களைப் பாடசாலைகளுக்கு அனுப்ப வேண்டாம் என சுகாதார அமைச்சு பெற்றோர்களிடம் கோரிக்கைவிடுத்துள்ளது.

கொழும்பில் நேற்று(23) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன இதனைத் தெரிவித்தார். மேலும்,

நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளில் தரம் ஒன்று முதல் 5 வரையான ஆரம்ப பிரிவுகளை நாளை(25) முதல் ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு ஏதாவது நோய் அறிகுறிகள் காணப்படுமாயின் அவர்களைப் பாடசாலைகளுக்கு அனுப்ப வேண்டாம் எனவும் இது தொடர்பில் ஆசிரியர் அல்லது அதிபருக்கு தெரியப்படுத்துமாறும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் கோரியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய Viber குழுவில் இணைந்து கொள்ளுங்கள் (இங்கே கிளிக் செய்யுங்கள்)