பரபரப்பாகும் கொழும்பு அரசியல் – ஜனாதிபதி தலைமையில் தீர்க்கமான பேச்சு இன்று!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று(24) மாலை ஜனாதிபதி செயலகத்தில் விசேட கூட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.

குறிப்பாக இலங்கையில் நிலவிவருகின்ற பசளைப் பிரச்சினை உள்ளிட்ட பல விடயங்கள் இந்த சந்திப்பில் அதிகமாக பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தற்போது ஆளுங்கூட்டணிக்குள் ஏற்பட்டிருக்கின்ற முருகல் நிலைக்குள் இச் சந்திப்பானது அரசியல் களத்தில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.

ஜனாதிபதி தலைமையிலான இக் கூட்டத்திற்குச் செல்வதா இல்லையா என்பது குறித்து முடிவு செய்யவுள்ளதாக மைத்திரி மற்றும் விமல் அணியினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் அறிய Viber குழுவில் இணைந்து கொள்ளுங்கள் (இங்கே கிளிக் செய்யுங்கள்)