ஆரம்பப் பிரிவு கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்

நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவுகளினுடைய கல்வி நடவடிக்கைகள் இன்று(25) ஆரம்பமாகியுள்ளன.

இன்று நாடு முழுவதும் உள்ள 9,100 க்கும் அதிகமான பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

கொரோனா வைரஸ் தொற்று நிலை முழுமையாக நீங்கவில்லை. இதனால், மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பாக முக்கியத்துவம் செலுத்துவது அவசியமாகும். பிள்ளைகளுக்கு ஏதாவது சுகயீனம் இருக்குமாயின், அவர்களை பாடசாலைகளுக்கு அனுப்புவதை தவிர்க்குமாறு சுகாதார அமைச்சு, பெற்றோரிடம் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் அறிய Viber குழுவில் இணைந்து கொள்ளுங்கள் (இங்கே கிளிக் செய்யுங்கள்)