நாட்டில் கனிய எண்ணெய், துறைமுகம், புகையிரதம், தபால், வங்கி முதலான சேவைகளை அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தும் வகையில் விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஜனாதிபதியினால் நேற்று(29) இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை, வட மாகாணத்தின் புதிய ஆளுநராக ஜீவன் தியாகராஜா நியமிக்கப்பட்டமை தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, கடந்த 11ஆம் திகதி முதல், நடைமுறைக்கு வரும் வகையில், வட மாகாண ஆளுநராக ஜீவன் தியாகராஜா நியமிக்கப்பட்டுள்ளதாக குறித்த வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய Viber குழுவில் இணைந்து கொள்ளுங்கள் (இங்கே கிளிக் செய்யுங்கள்)





