“ஒரே நாடு ஒரே சட்டம்” என்ற கொள்கை வரைபை உருவாக்குவதற்கான ஜனாதிபதி செயலணியின் தலைமை பதவி கலகொட அத்தே ஞானசார தேரருக்கு வழங்கப்பட்டமையானது எனக்கு ஆலோசனை வழங்குவதற்காகவே தவிர நாட்டுக்கு நீதியை வழங்குவதற்காக அல்லவென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஆளுங்கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களின் சந்திப்பில் வைத்து ஜனாதிபதி இததை் தெரிவித்துள்ளார். மேலும்
நான் செய்யும் சொல்லும் அனைத்திற்கும் கட்சித் தலைவர்களிடம் ஆலோசனைப் பெற சென்றால், தனக்கு தேவையான நண்பர்களை தெரிவு செய்வதற்கும் அவர்களிம் அனுமதி பெற வேண்டிய நிலை ஏற்படும்.
நீதி அமைச்சராக அலி சப்ரியை தெரிவு செய்த சந்தர்ப்பத்திலும் இவ்வாறு எதிர்ப்புகள் வந்தது, என ஜனாதிபதி தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய Viber குழுவில் இணைந்து கொள்ளுங்கள் (இங்கே கிளிக் செய்யுங்கள்)





