நாடு திரும்பியதும் கூட்டமைப்புடன் பேச தயாராகிறார் ஜனாதிபதி கோட்டாபய

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுக்களை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தயாராகி வருவதாக இராஜதந்திர வட்டாரங்களிடத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் நம்பிக்கை அளிக்கும் வகையில் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

குறிப்பாக ஸ்கொட்லாந்திலிருந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடு திரும்பியதும் பேச்சுவார்த்தைக்கான செயற்பாட்டு ரீதியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

முன்னதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பு முதன்முறையாக கடந்த ஜுன் மாதம் 16ஆம் திகதி நடைபெறுவதாக தீர்மானிக்கப்பட்டபோதும் இறுதி நேரத்தில் அந்தப் பேச்சுவார்த்தை ஜனாதிபதியால் இரத்துச் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் அறிய Viber குழுவில் இணைந்து கொள்ளுங்கள் (இங்கே கிளிக் செய்யுங்கள்)