கல்வி அமைச்சுக்குள் சர்ச்சை – செயலாளரை மாற்றக்கோரி அமைச்சர் விடாப்பிடி!

கல்வி அமைச்சின் செயலாளருடன் தொடர்ந்து பணியாற்ற முடியவில்லை என கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிடம் தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சின் செயலாளர் பதவிக்கு வேறொரு நபரை நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறும் கல்வியமைச்சர் பிரதமரிடம் கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கல்வி அமைச்சின் செயலாளர் பதவிக்கு புதிதாக ஒருவருடைய பெயரை கல்வி அமைச்சர் பரிந்துரை செய்துள்ளதாக தெரிய வருகின்றது.

இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில் தான் ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தனவிடம் உறுதியளித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

செய்திகளை உடனுக்குடன் அறிய Viber குழுவில் இணைந்து கொள்ளுங்கள் (இங்கே கிளிக் செய்யுங்கள்)