நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றால் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.
பின்னர் இன்று மாலை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவரை பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்
கைதுசெய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு பிற்பகல் 2.40 மணியளவில் அழைத்துவரப்பட்டுள்ளார்.
காணொளி – https://youtu.be/kcfiznBMN70
கைதுசெய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் கொழும்பு கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.
முதலாம் இணைப்பு
காணொளி – https://youtu.be/kcfiznBMN70
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இன்று(07) காலை 8.15 மணியளவில் கொழும்பில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் பொலிஸாருடன் அவதூறான வார்த்தைகளை பயன்படுத்தியமை போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டது.
மருதங்கேணி பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்ட போதும் அவர் முன்னிலையாகாத நிலையிலேயே கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் கூறினர்.
இந்தக் குற்றச்சாட்டுகளின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீது தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றினால் அவருக்கு வெளிநாட்டு பயணத்தடை நேற்றைய தினம் விதிக்கப்பட்டது.
இதேவேளை இந்தக் குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் இருவர் கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.









