இன்று (06) பூநகரி பல்லவராயன்கட்டுச் சந்தியில், பல்லவராய மாமன்னனின் சிலை பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களது பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுதிட்ட நிதி ஓதுக்கீட்டில் மாமன்னன் பல்லவராயன் சிலை திறந்துவைக்கப்பட்டது.
“கி.பி.12ம் நூற்றாண்டில் வன்னிப் பெருநிலப்பரப்பில் சுயாட்சியுடைய நகரங்களையும், இராணுவக் கட்டமைப்புகளையும் வைத்து ஆட்சிசெய்த சிற்றரசர்களுள், பல்லவராயன் வீரத்தின் அடையாளமாக நிற்கிறான்”






