வல்வெட்டித்துறை நகர சபை அமர்வில் குழப்பம், அடுத்த அமர்வு பொலிஸ் பாதுகாப்புடன்

வல்வெட்டித்துறை நகர சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டம் தொடர்பிலான அமர்வு இன்று இடம்பெற்றபோது சபையில் ஏற்பட்ட குழப்பத்தால் சபை அமர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இன்றைய அமர்வில் தொடர்ந்தும் உறுப்பினர்கள் குழப்பம் விளைவித்ததால் அமர்வை கொண்டு நடத்த முடியவில்லை என்று தெரிவித்த தவிசாளர்தனக்கு உறுப்பினர்களால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

இதன் காரணமாக வரவு – செலவுத்திட்டம் தொடர்பிலான தொடர்பான அடுத்த அமர்வு பொலிஸ் பாதுகாப்புடன் இடம்பெறும் என தெரிவித்து தவிசாளர் அமர்வை ஒத்திவைத்துள்ளார்.