மூத்த ஊடகவியலாளர் வித்தியாதரனின் “முரசு” மின்னிதழ் வெளியீடு

மூத்த ஊடகவியலாளர் வித்தியாதரனின் “முரசு” மின்னிதழ் வெளியிட்டு நிகழ்வு இன்று(01) மாலை யாழ்ப்பாணம் கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன் ஆகியோரும் விருந்தினர்களாக புளொட் தலைவர் சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் சுரேஷ்பிரேமச்சந்திரன், வடக்குமாகாண அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம், தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் ஐங்கரநேசன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் சிறிசற்குணராஜா, கலைப்பீட பீடாதிபதி சி.ரகுராம் ஆகியோர் கலந்துகொண்டனர்.(newscut)

“முரசு” மின்இதழினை இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்துவைத்தார்.

முரசு மின்இதழானது காலை மாலை என இரு பதிப்புகளாக வெளிவரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.(newscut)