தமிழ்த் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து சிவாஜிலிங்கம் நீக்கம்?

BREAKING சிவாஜிலிங்கம் நீக்கப்பட்டவில்லை! சிறிகாந்தா அறிவிப்பு

 

தமிழ் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து சிவாஜிலிங்கம் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

ஜனாதிபதி ரணில் இந்திய பயணிப்பதற்கு முன்னதாக தமிழ் தேசிய கூட்டமைப்பினர்,13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்த கோரி, இந்திய பிரதமருக்கு கடிதம் அனுப்பியிருந்தனர்.
அந்த சமயத்தில் இந்தியாவில் தங்கியிருந்த எம்.கே.சிவாஜிலிங்கம், அதற்கு முரணான- முற்றிலும் நேர்மாறான கோரிக்கையை வலியுறுத்தி மோடிக்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தர்.

தமிழர்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வாக தனிநாட்டுக்கான பொதுசன வாக்கெடுப்பை நடாத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.

இந்நிலையில் கட்சியின் செயலாளர் பொறுப்பிலிருந்து எம்.கே.சிவாஜிலிங்கத்தை விலகுமாறு கட்சி தலைமையால் கோரப்பட்டிருந்தது. அவர் பதவிவிலகாததையடுத்து, கட்சியை விட்டு நீக்கப்படுவதாக நேற்று நடந்த கட்சியின் தலைமைக்குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

இது தொடர்பில் அறிவதற்கு சிறிகாந்தா, சிவாஜிலிங்கத்தை தொலைபேசியில் பலமுறை தொடர்பு கொண்டபோதும் முடியவில்லை.