இலங்கையில் 6,000 சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா!

நாட்டில் இதுவரையில் 6,000 சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக அரச தாதியர்கள் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னப்ரிய தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று(29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கண்டி வைத்தியசாலையில் மாத்திரம் 250 சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய Viber குழுவில் இணைந்து கொள்ளுங்கள் (இங்கே கிளிக் செய்யுங்கள்)