இலங்கையில் மீண்டும் இனக்கலவர சூழல் இந்திய உளவுத்துறை எச்சரிக்கை

இலங்கையில் மீண்டும் இனக்கலவரம் வெடிக்கும் சூழல் உருவாகி வருவதாக இலங்கையை கண்காணிக்கும் இந்திய உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது பற்றி தமிழகத்தின் தினமலர் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழர் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் சிங்கள, பௌத்த ஆக்கிரமிப்புகளால் தமிழ் மக்கள் சீற்றமடைந்துள்ளதாகவும், 13 ஆம் திருத்தத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதி மேற்கொண்ட நடவடிக்கைகளால் சிங்கள மக்கள் சீற்றம் அடைந்துள்ளதாகவும், 13ஆம் திருத்தத்தினை அமல்படுத்தாதுவிடின் தமிழர்கள் பாரிய போராட்டத்துக்கு தயாராகுவார்கள் எனவும் இதனால் நாட்டில் இனக்கலவரம் ஒன்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது எனவும் அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.