யாழ்ப்பாணம் – ஆரியகுளம் நாக விகாரையில் பௌத்த பிக்குகள் மற்றும் சைவ அமைப்புக்களின் பிரதிநிதிகள், சைவக் குருமார்களும் இரகசிய கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று (17) காலை 10 மணிக்கு ஆரம்பமான இக்கலந்துரையாடல் சுமார் இரண்டு மணித்தியாலங்களுக்கு மேல் இடம்பெற்று வருகிறது.
இக் கலந்துரையாடலில் குருந்தூர்மலை விகாராதிபதி, தையிட்டி திஷ்ஷ விகாரை விகாராதிபதி, நாவற்குழி சமத்தி சுமன விகாரை விகாராதிபதி, சிவசேனை அமைப்பு உட்பட சில சைவ அமைப்புக்கள், இந்துக்குருமார்கள் கலந்துகொண்டுள்ளனர்.
நாளை குருந்தூர் மலையில் சைவர்கள் பொங்கலில் ஈடுபடவுள்ள நிலையில், அது தொடர்பான கலந்துரையாடல் நடத்தப்படுகிறதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
தொடர்புடைய மற்றுமொரு செய்தி
குருந்தூர் மலையில் சிவன் கோவில் கட்ட இந்து – பௌத்த மதத்தலைவர்கள் யாழில் தீர்மானம்






