யாழ்ப்பாணம், ஏ9 வீதியில் இன்று(19) மதியம் பொலிசாரின் தண்ணீர் பவுசரும், மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் கணவன் உயிரிழந்ததுடன் மனைவி படுகாயமடைந்துள்ளார்.
இன்று மதியம் நல்லூர் செம்மணி வளைவிற்கு அண்மையாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
கணவன் மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் வந்தபோது, பொலிசாரின் தண்ணீர் பவுசருடன் மோதி விபத்துக்குள்ளாகினர்.
இதில் கொக்குவில் கிழக்கை சேர்ந்த புவனேஸ்வரன் மனோஜ் (31) என்ற இளைஞரே உயிரிழந்தார். 26 வயதான மனைவி உயிராபத்தான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.






