இந்திய தூதுவரால் உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைப்பு


இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் வறுமைக்கோட்டுக்குட்பட்ட 200 குடும்பங்களுக்கான உலர் உணவுப் பொதிகள் இன்றையதினம் வழங்கிவைக்கப்பட்டன.

யாழ்ப்பாணத்திற்கு இன்றையதினம் விஜயம் மேற்கொண்ட இந்தியத்தூதுவர் ஶ்ரீ சந்தோஷ் ஜா யாழ்மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட 200 குடும்பங்களுக்கான உலர் உணவுப் பொதிகளை யாழ்ப்பாணம் மத்திய கலாச்சார மண்டபத்தில் வைத்து வழங்கிவைத்தார்.

இந் நிகழ்வில் இந்தியத்தூதுவர் ஶ்ரீ சந்தோஷ் ஜா, இந்திய துணைத்தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் யாழ் மாநகரசபை ஆணையாளர் கிருஷ்னேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.