யாழ் முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் நாளை கவனயீர்ப்பு போராட்டம்

யாழ்ப்பாணத்தில் போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

நாளை(11) யாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக யாழ். மாவட்ட முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

அண்மைய நாட்களில் யாழ் மாவட்டத்தில் இணைய செயலி மூலம் முச்சக்கர வண்டி சேவையினை மக்கள் பயன்படுத்தி வருவதன் காரணமாக தாம் பாதிப்பினை எதிர்கொண்டுள்ளதாகவும் அதனை நிவர்த்தி செய்யுமாறு கோரியுமே இப் போராட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.

நாளை புதன்கிழமை காலை பண்ணையில் அமைந்துள்ள தூர இடங்களுக்கான பேருந்து நிலையத்திலிருந்து ஆரம்பமாகும் பேரணி, யாழ் நகரில் உள்ள வீதி வழியாக வருகை தந்து இறுதியில் கடற்தொழில் அமைச்சரிடம் மகஜர் ஒன்றினையும் கையளிக்கவுள்ளதாக முச்சக்கர வண்டி சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.