பிரித்தானிய அமைச்சருடன் தமிழ் எம்.பிக்கள் சந்திப்பு

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட பிரித்தானிய அமைச்சர் ஆன் மேரி ரெவலியன்க்கும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையிலான சந்திப்பு நேற்று இடம்பெற்றது.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தனியார் விடுதியில் நேற்று பிற்பகல் 7மணியளவில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.

இக் கலந்துரையாடலில் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.வி.விக்னேஸ்வரன், சிவஞானம் சிறீதரன், தர்மலிங்கம் சித்தார்தன் மற்றும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ரூ பட்ரிக்  ஆகியோர் கலந்துகொண்டனர்.