தமிழ் கட்சித் தலைவர்கள் கிழக்கு பயணம்! ஹர்த்தால் தொடர்பில் கலந்துரையாட முடிவு

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழ் மக்கள்கூட்டணியின் தலைவர் சி.வி விக்னேஸ்வரன், ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர்கிழக்கு மாகாணத்தில் இருக்கக்கூடிய ஏனைய கட்சியினுடைய தலைவர்களுடன் இணைந்து ஹர்த்தால் தொடர்பான விசேட பத்திரிகையாளர் மாநாடு ஒன்றை நடத்தவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் 20ஆம் திகதி மேற்கொள்ளப்படவுள்ள ஹர்த்தால் தொடர்பானமுன்னாயத்தக் கலந்துரையாடல் ஒன்று நேற்று மாலை தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர்சி.வி.விக்னேஸ்வரன் இல்லத்தில் இடம் பெற்றது. இதன்பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதேமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு – கிழக்கில் மேற்கொள்ளவுள்ள ஹர்த்தால் தொடர்பில் அனைவரும் பேசி இறுதி முடி ஒன்றை எடுத்துஇருக்கின்றோம்.

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழ் மக்கள்கூட்டணியின் தலைவர் சி.வி விக்னேஸ்வரன், ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர்கிழக்கு மாகாணத்தில் இருக்கக்கூடிய ஏனைய கட்சியினுடைய தலைவர்களுடன் இணைந்து ஹர்த்தால்தொடர்பான விசேட பத்திரிகையாளர் மாநாடு ஒன்றை நடத்த உள்ளனர்.

மேலும் கிழக்கு மாகாணத்தில் உள்ள சிவில் அமைப்புகள் வர்தக பிரதிகளுடனும் கலந்துரையாடலில்ஈடுபடவுள்ளோம். எதிர்வரும் புதன்கிழமை திருகோணமலை மற்றும் வவுனியா வர்தகசங்கப் பிரதிநிதிகளுடனும்கலந்துரையாடலில் ஈடுபட்டு ஹர்த்தால் தொடர்பான விடயங்களை முன்னெடுப்பதற்கு தீர்மாணித்துள்ளோம்.

முல்லைதீவில் நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகாரலிங்கம் தலைமையில் நேற்று முன்தினம் வர்தக சங்கப்பிரதிநிதிகளுடனும் கலந்துரையாடல்களில் ஈடுபட்டோம். எதிர்வரும் நாட்களில் கிளிநொச்சி வர்தக சங்கப்பிரதிநிதிகளுடனும் கலந்துரையாடவுள்ளோம்.

அந்த வகையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை முஸ்லிம் மக்களுடைய ஒத்துழைப்புடனும் சகல தமிழ் தரப்புகளின்ஒத்துழைப்புடனும் இந்த ஹர்த்தால் முன்னெடுக்கப்படவுள்ளது.

தமிழ் மக்களுக்கான நீதி என்பது தொடர்ந்து மறுதலிக்கப்படுகிறது என்பதை வலியுறுத்தியும், சிங்கள பௌத்தமக்கள் வாழாத தமிழ் முஸ்லிம் மக்கள் வசிக்கும் பிரதேசங்களில் தொடர்ச்சியாக காணிகள் அபகரிக்கப்பட்டுஅங்கு பௌத்த கோவில்கள் நிறுவுவதற்கான வேலைகள் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் தொடர்ச்சியாகஇடம்பெறுகின்றது என்பதை கண்டித்தும், நிறுத்தக் கோரியும், மட்டக்களப்பு மயிலத்தமடு  மேய்ச்சல்தரைபிரச்சினைக்கு  தீர்வு  கோரியும்  எதிர்வரும் 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள ஹர்த்தாலுக்குஅனைவரும் ஒத்துழைப்பு வழங்குவார்கள் என நம்புகின்றோம் என்றார்.

ஹர்தால் தொடர்பான முன்னாயத்தக் கலந்துரையாடலில் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும்நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவரும்நாடாளுமன்ற உறுப்பினருமான சித்தார்த்தன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் நாடாளுமன்றஉறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன்தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் சிவாஜிலிங்கம், ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன்ஆகியோரும் கலந்து கொண்டனர்.