சுமந்திரனுக்கும் அவர் ஆசிரியரான எனக்கும் சிகிச்சை தேவைப்படலாம்! விக்கி பதிலடி

ஆசிரியரும் மாணவனுமாக நானும் சுமந்திரனும் சிகிச்சை பெற வேண்டிய அவசியம் இருக்கும் போல தெரிகிறது என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

இந்தியப் பிரதமருக்கு தமிழ்க் கட்சிகளால் அனுப்பப்பட்ட கடிதம் இந்தியப்பிரதமரை சென்றடையவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் அண்மையில் தெரிவித்திருந்தார். Jaffna Gallery ஊடகத்தின்  நேர்காணலில் கலந்து கொண்ட சுமந்திரன் இந்தியப் பிரதமருக்கு கடிதம்கிடைத்துள்ளதாகவும், விக்னேஸ்வரன் மறதி வியாதிக்கு வைத்தியரை நாடுவது நல்லது எனவும் தெரிவித்திருந்தார். 

இது தொடர்பில் விக்னேஸ்வரனிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதேமேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்

எனக்கு தெரிந்தவரையில் இந்திய பிரதமருக்கு தமிழ் கட்சிகள் அனுப்பிய கடிதமானது இன்னும் சென்றடையவில்லை என்று தகவல் கிடைத்தது. இந்திய பிரதமரிடம் கடிதம் சென்றடைந்தது என சுமந்திரனுக்கு நன்றாக தெரிந்திருக்கும் எனில் எதற்காக இந்திய(NewsCut.lk) பிரதமர் அந்த கடிதத்திற்குரிய பதிலை அனுப்பவில்லை என்ற கேள்விக்கும் சுமந்திரனே பதில் சொல்ல வேண்டும்.

சுமந்திரன் சொல்வதுபோல் கடிதம் இந்திய பிரதமரிடம் சென்றடைந்திருந்தால் அதற்குரிய பதில் கடிதத்தினை இந்தியப் பிரதமர் அனுப்பாமல் இருப்பதற்கு ஏதேனும் காரணம் ஒன்று இருக்க வேண்டும். எனனிடம் சொல்லப்பட்டது என்னவெனில் அது ஒரு இடத்தில் தேங்கி நிற்பதாகவும் பிரதமரிடம் சென்றடையவில்லை எனவும் கூறப்பட்டது.

இந்தியப் பிரதமருடைய காரியாலயத்திற்கு செல்லும்(NewsCut.lk) கடிதங்கள் யாவற்றிற்கும் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் பதில் எழுதப்படும் எனக் கூறப்பட்டது. அவ்வாறான பதில் வராததை வைத்துதான் இந்தியப்பிரதமருக்கு தமிழ்க் கட்சிகள் அனுப்பிய கடிதம் சொல்லவில்லை என சொல்ல வேண்டி ஏற்பட்டது.

இந்தியத் தூதுவர் பிரதமர் மோடியிடம் தமிழ் கட்சிகளின் கடிதத்தை கையளித்துவிட்டு சுமந்திரன் ஒரு பெரிய ஆள்என  எண்ணி தான் கடிதத்தை கையளித்துவிட்டேன் என தூதுவர் தொலைபேசியில் சொன்னார் என என்னால் நம்ப முடியவில்லை.

மறதி வியாதிக்கு விக்னேஸ்வரன் வைத்தியரை நாடுவது நல்லது என சுமந்திரன் தெரிவித்திருந்தார். சிகிச்சை சுமந்திரனுக்கும் தேவைப்படலாம் எனக்கும் தேவையாக இருக்கலாம். நாங்கள் எல்லோரும் மனதால் பிரச்சினைப்பட்டவர்கள் தானே, ஆசிரியரும் மாணவரும் என நானும் சுமந்திரனைம் இணைந்து சிகிச்சை பெறவேண்டிய அவசியம் இருக்கும் போல தெரிகிறது எனத் தெரிவித்தார்.