கார்த்திகை மாதத்தினை முன்னிட்டு யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவுத்தூபி துப்பரவு செய்யப்பட்டு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டது.
மாவீரர்நாள் வாரம் இம் மாதம் கடைப்பிடிக்கவுள்ள நிலையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவுத்தூபியை துப்பரவு செய்யும் பணிகளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்றைய தினம் ஈடுபட்டனர்.
அதன்பின் தூபியில் ஈகைச்சுடர் ஏற்றி மாணவர்கள் மரியாதை செலுத்தினர்.
மாவீர்ர் நாள் நினைவேந்தல்கள் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தொடர்சியாக இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.







