தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை மற்றும் காற்று காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போதுவரை 756 குடும்பங்களை சேர்ந்த 2941 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்து பிரிவு உதவி பணிப்பாளர் ரீ.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
அத்தோடு சீரற்ற காலநிலைகாரணமாக காணாமல் போன மூன்று நபர்களில் இருவர் வீடு திரும்பியுள்ளனர். அத்தோடு 4 நபர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
மாவட்டத்தில் 15 வீடுகளுக்கு= முழு அளவில் சேதம் ஏற்பட்டுள்ளதோடு, 153வீடுகள் பகுதியளவில் சேதம் ஏற்பட்டுள்ளன. இதுவரை 5 இடைத்தங்கல் முகாம் அமைக்கப்பட்டு மக்கள் பாதுகாப்பான முறையில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக சண்டிலிப்பாய், சாவகச்சேரி, பருத்தித்துறை, தெல்லிப்பழை மற்றும் வேலணை ஆகிய பகுதிகளிலேயே குறித்த இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாக ரீ.என்.சூரியராஜா மேலும் குறிப்பிட்டுள்ளார்.






