யாழ் மாவட்டத்திற்கு தரமற்ற கேக் விற்பனைக்காக கொண்டுவரப்படுவதாகவும் சுகாதார தரப்பினர் இது தொடர்பில் கண்டுகொள்வதில்லை எனவும் யாழ் மாவட்ட கூட்டுறவு வெதுப்பக உற்பத்தியாளர் சங்கத்தின் உப தலைவரும், ஊடகப் பேச்சாளருமான கந்தசாமி குணரட்ணம் தெரிவித்தார்.
நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,
பண்டிகைக் காலத்தில் முட்டை விலை குறைவடைந்துள்ளது எனவே பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட மாட்டாது. மக்களின் நன்மை கருதி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளோம்.
வெளி மாவட்டங்களில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவரப்பட்டு குறைந்த விலைக்கு கேக்குகள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த கேக் தரமற்றது. இது குறித்து சுகாதாரப் பிரிவினர் கண்டு கொள்வதே இல்லை. இதனை நான் பகிரங்கமாகவே கூற விரும்புகின்றேன்.
தரமான பொருட்கள் மக்களை சென்றடைவதை சுகாதாரப் பிரிவினர் கண்காணிக்க வேண்டும், என தெரிவித்தார்.






