
யாழ்ப்பாண புங்குடுதீவிலிருந்து மண்டைதீவு நோக்கி சட்ட விரோதமாக மாடுகள் கடத்துவதாக கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நடத்திய சுற்றி வளைப்பின் போது மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட மூவரில் பொலிஸ் உத்தியோகஸ்தர் உட்பட மூவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.கடத்திச் செல்லப்பட்ட எட்டு மாடுகள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனமும் மீட்கப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரி யாழ் தலைமை பொலிஸ் நிலையத்தில் குற்ற விசாரணை பிரிவில் கடமையாற்றி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இவ் சட்ட விரோத செயற்பாடு தொடர்பில் மேலதிக விசாரனைகள் நடைபெறுகின்றன.





