யாழ் போதனா வைத்தியசாலையின் பரிசோதனையில் ஒருவருக்கு தொற்று

யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று 118 பேருக்கான கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதன் போது ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதியாகியுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

துபாய் நாட்டில் இருந்து நாடு திரும்பிய பெண்மணி ஒருவர் தற்போது வவுனியா பொது வைத்தியசாலையில் தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சை பெற்று வருகின்றார் அவருக்கே கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்றைய பரிசோதனைக்கு உட்பட்டவர்களுக்கும், வடக்கு மாகாணத்தில் ஏனையவர்களுக்கும் கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.