
தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் வங்கி மற்றும் நிதித்துறை நிறுவனங்களின் மாநாடு நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் மாலை 6.30 மணியளவில் தனியார் விடுதியில் ஆரம்பமானது.
இதில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க உட்பட பலர் கலந்துகொண்டனர். இக் கூட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கலந்துகொண்டிருந்தார்.
இவ்விடையம் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கலந்துகொண்டதற்கான காரணம் வெளியாகியுள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் மாநாடு இடம்பெற்ற தனியார் விடுதியில் அநுரகுமார திசாநாயக்கவிற்கும் சுமந்திரனுக்குமிடையிலான சந்திப்பு நடைபெறவிருந்தாகவும் அதன் காரணமாக சுமந்திரன் வருகைதந்த நேரத்தில் கூட்டம் முடிவடையாததால் அவர் மண்டபத்தில் அமர்ந்திருந்தாகவும் கூறப்படுகின்றது.
எனினும் சுமந்திரன் மற்றும் அநுரவிற்கிடையிலான சந்திப்புபற்றி அரசியல் ஆய்வாளர்கள் பலரும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றமை குறிப்பைடத்தக்கது.





