காணொளி -https://www.facebook.com/share/v/3QMaEmTQ7nPAFNaN/?mibextid=WC7FNe
கிளிநொச்சி – பொன்னாவெளி பிரதேசத்தில் சிமெந்து தொழிற்சாலையை அமைப்பதற்கான ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதற்காக அதிகாரிகள் முற்பட்ட வேளை அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் ஆய்வுப் பணிகளில் ஈடுபடுவதற்கு அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், எதிர்ப்பில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடி ஆய்வின் நோக்கம் தொடர்பாக தெளிவுபடுத்துவதற்காக குறித்த பகுதிக்கு சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன்(NewsCut.lk) அப்பகுதி மக்கள் முரண்பாட்டில் ஈடுபட்டனர்.
இந் நிலையில் அமைச்சருடன் வந்த ஈ.பி.டி.பி கட்சி உறுப்பினர்களை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தாக்க முற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந் நிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பாதுகாப்பு அதிகாரிகளின் துணையுடன் அவ் இடத்திலிருந்து அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.







