அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு! இன்று முதல் கிடைக்கவுள்ள தொகை

அரச ஊழியரின் ஏப்ரல் மாத சம்பளத்தை இன்று(08) முதல் வழங்க அரசாங்கம் தயாராக இருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

கேகாலையில் நேற்று(07)இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்தே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அதன்போது, 10,000 ரூபா அதிகரிப்புடன், இன்று முதல் நிறுவனங்களுக்கு பணம் விடுவிக்கத் தயார் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.